சங்கடஹர சதுர்த்தி - சங்கடம் என்றால் துன்பம்
ஹர (கர) என்றால் அறுப்பவன் சதுர்த்தி என்றால் அமாவாசை, பௌர்ணமிக்குப் பின் வரக்கூடிய நான்காம் நாள் என்று பொருள்.சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்வதால் நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்கி, விநாயகரின் நல்லருளைப் பெற்றிடலாம். நாம் சாதாரணமாக ஒரு விரதத்தை மேற்கொள்வது போல காலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை, புனஸ்காரங்களைச் செய்ய வேண்டும். குலதெய்வத்தை வணங்கிவிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யவும்.